சு.கவின் பல எம்.பி.க்களுடன் சந்திரிகா விசேட சந்திப்பு ; அரசியல் அரங்கில் திருப்புமுனை!

Date:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (ஜன.08) மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...