எரிபொருள் விலை பாரிய அளவில் உயர்வு

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின்  விலை ரூ. 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ. 365.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை  ரூ. 60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...