இலங்கையானது எதிர்காலத்தில் அதன் சனத்தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிறப்பு வீதம் 25 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையே இந்நிலைமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் என பேராசிரியர் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதன் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் எனவும் பேராசிரியர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.