புதிய கூட்டணியை அமைக்கும் ஐ.தே.க – பொதுஜன பெரமுன ; பொது சின்னத்தில் போட்டி!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி மன்றங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது சில உள்ளுராட்சி மன்றங்களில் இரு கட்சிகளும் பொது சின்னத்தையே பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் போட்டியிடும் கட்சி சின்னங்களை தீர்மானிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் நாளை (10) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அங்கு போட்டியிடுவதற்கான நடைமுறை மற்றும் பொது சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, பாலித ரங்கே பண்டார, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

SLPP சார்பில் பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...