Friday, January 10, 2025

Latest Posts

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  16 ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” என்ற கருத்தின் ஊடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.