கனடாவுக்குள் நுழைய மஹிந்த, கோட்டாவுக்கு தடை!

0
165

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட நான்கு அரச அதிகாரிகள் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சினால் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், ஸ்டாஃப் சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது தடைகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தடைவிதிப்பட்டவர்களுடன் கனேடிய குடியுரிமையுள்ளவர்கள் கனடாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு நிதி பொருளதாதார மற்றும் சொத்துகள் தொடர்பான தொடர்புகளை பேணுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டவர்களுக்கு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவுக்குள் உள்நுழைவதற்குரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here