மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அது தொடர்பான ஹன்சாட் பதிவை நீதி அமைச்சர் விஜேதாச சபைக்கு சமர்ப்பித்தார். இந்நிலையில் நீதி அமைச்சர் கூறிய விடயம் பொய் . மலையக மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு எதிராகவே ஜீ. ஜீ. பொன்னம்பலம் வாக்களித்தார் என்பதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. அந்த ஹன்சாட்டை வைத்தே நிரூபித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸவுக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
இதன் பொது உங்கள் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தான் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தவர். மலையக மக்களின் பிரஜா வுரிமையை பறித்தவர் என நீதி அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. நீதி அமைச்சர் ஒரு பொய்யர். எனது பாட்டனார் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்க ஆதரவளிக்கவில்லை. நீங்கள் ஒரு பொய்யர் என்பதனால் மீண்டும் மீண்டும் இந்தப்பொய்யைக்கூறி வருகின்றீர்கள். மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்க எனது பாட்டனார் ஆதரவளித்து சபையில் கை தூக்கினார் என்பதை நீங்கள் நிரூபித்தால் நான் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்கின்றேன் என சவால் விடுத்தார்.
இதன் பின்னர் வெளியே சென்ற நீதி அமைச்சர் ஓர் ஆவணத்துடன் சபைக்கு வந்து மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்க எனது பாட்டனார் ஆதரவளித்து சபையில் கை தூக்கினார் என்பதை நீங்கள் நிரூபித்தால் நான் எனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்கின்றேன் என சவால் விடுத்தார். அவர் ஆதரவளித்ததாக கூறும் ஹன்ஸாட்டை இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
இதனையடுத்தது நீதி அமைச்சர் சபைக்கு சமர்ப்பித்த ஹன்சாட்டை வைத்தே . இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் சட்டத்திற்கு ஜீ,.ஜீ. பொன்னம்பலம் எதிர்த்து வாக்களித்ததையும் ஜவஹர்லாலின் பரிந்துரையில் இந்திய- பாகிஸ்தான் பிரஜாவுரிமை சட்டத்தின்படி மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்பதற்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தையும் ஆதாரபூர்வமாக காட்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. நிரூபித்தார்.