Sunday, October 6, 2024

Latest Posts

அமைச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி,

பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் சிறப்பு செயல்பாடுகளும் நீதி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளன.

கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த தேசியக் கல்வி ஆணைக்குழு மற்றும் தேசியக் கல்வி ஆணையச் சட்டம் (எண். 1991) ஆகியவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சின் விசேட முன்னுரிமைகளின் கீழ் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை இலங்கை முதலீட்டுச் சபை உள்ளடக்கியுள்ளது.

1980 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (ஒருங்கிணைத்தல்) சட்டம் கைத்தொழில் அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவை பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.