எதிர்கால சந்ததியினர் குறித்து சஜித் வடக்கில் வௌியிட்ட கருத்து

0
200

அறிவும் திறமையும் ஆற்றலும் நிரம்பிய பிள்ளைகளின் தலைமுறையைக் காண்பதே தனது ஒரே விருப்பம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) தெரிவித்தார்.

முறையான கல்வி முறையின் ஊடாக எமது பிள்ளைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சம் 9 ஆம் கட்டம் ஊடாக வட்டப்பளை இந்துக் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’திட்டத்தின் 9 ஆவது கட்டம் நேற்று (10) ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வட்டப்பளை இந்துப் பாடசலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here