2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை சிறிகொத்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் பாலித்த ரங்கே பண்டாரவிடம் கோட்டே கட்சித் தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்த ரங்கே பண்டாரவுக்கு பதிலாக ரவி கருணாநாயக்க இந்த ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியிருந்த போதிலும் அது நடைபெறவில்லை.