மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் – இருவர் கைது

0
158

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பெற்றோல் போத்தல் வீதியில் வீழ்ந்து வெடித்துள்ளதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற இருவரைப் பொலிஸார் துரத்திச் சென்று பிடித்தனர்.

மண்டைதீவு மற்றும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர் என்றும், இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தையும், தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதால் தீவகப் பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப்பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here