இந்தியாவில் நடந்த முக்கிய மாநாட்டில் மலையக மக்கள் சார்பில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்

0
67

புதுடில்லியில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில்வல்லுனர்கள்,அரசியல் தலைவர்கள்,விஞ்ஞானிகள் என பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி, , வெளியுறவுத் துறை அமைச்சர டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாச்சி, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ்குமார் சிங், ஆகியோரை செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here