யாழ். புத்திஜீவிகளுடன் எதிர்கட்சித் தலைவர் சந்திப்பு

Date:

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி தொழில் வல்லுநர்கள்,புத்திஜீவிகள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இடையில் சிநேகபூர்ப சந்திப்பொன்று நேற்று (11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.

நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில் வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு,மேலும் மேலும் தொழில் வல்லுநர்கள் சார்ந்த பங்களிப்பின் தேவை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகள் என வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எழுந்துள்ள புதிய சவால்களை இனங்கண்டு, நவீன உலகிற்கு ஏற்ற புதிய கருத்திட் திட்டங்கள் மற்றும் உத்திகள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்து விரிவான கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது.

அந்தந்த துறைகளில் திறமையும்,நிபுனத்துவ ஆற்றலும்,அறிவும் உள்ளவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் புறக்கணிப்பதே இன்று நாடு எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளுக்குக் பிரதான காரணமாகும்.

இவ்வாறான திறமையும் ஆற்றலும் கொண்ட நிபுணர்களை உரிய நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தாமல் இருப்பதன் நிலைமைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.தன்னிச்சையான மற்றும் முட்டாள்தனமாக அரசாங்கம் முடிவெடுப்பதே ஒவ்வொரு துறையின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான துரதிஷ்டமான நிலை ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மக்கள் சார்ந்த ஒர் நிலைபேறானபயணத்திற்கு தொழில் வல்லுநர்களின் ஆதரவு தேவை என்று கலந்து கொண்டிருந்த தொழில் வல்லுநர்களும் புத்திஜீவிகளும் வலியுறுத்தியதோடு,இன்று அப்படி இடம் பெறாமைக்கு தங்கள் வருத்தங்களையும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இதில் கலந்து கொண்டனர். இது தேசிய புத்திஜீவிகள் சபை மற்றும் ஐக்கிய புத்திஜீவுகள் ஒன்றியம் ஆகியவற்றால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...