அயலக தமிழர் மாநாட்டில் உலகத் தமிழர் தலைவராக செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அங்கீகாரம்

0
80

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ் மஸ்தான், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பொது மற்றும் மறுவாழ்வு துறை அரசு செயலாளர் க. நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here