அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சுகாதார தொழிற்சங்கங்கள்

Date:

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (16) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், கண் தொழில்நுட்ப வல்லுநர்கள், பல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார முகாமைத்துவ உதவி சேவைகள், சுகாதார அம்பியூலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள் உள்ளிட்ட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி கடந்த ஒரு வாரகாலமாக சுகாதார தொழிற்சங்கங்கள் அவ்வப்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இன்றைய தினமும் தடைப்படும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...