கல்வியுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை

0
19

கல்வி சீர்திருத்தத்தின் போது 6ஆம் வகுப்புக்குரிய மொட்யூல்கள் தொடர்பாக தெளிவான ஒரு பிழை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிழையை திருத்தி முன்னேறுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுவதால் 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

“கல்வி என்பது ஒரு கட்டிடம் கட்டுவது போலவோ, ஒரு பாலம் அல்லது கல்வெட்டு ஒன்றை அமைப்பது போலவோ எளிய விஷயம் அல்ல. கல்வி என்பது எங்கள் நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம். அதனுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை. அங்கு ஒரு தெளிவான பிழை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிழையை திருத்திக்கொண்டு முன்னேற எங்களுக்கு காலம் தேவைப்படுகிறது.

எனவே, இதுகுறித்து பொதுமக்களை தெளிவாக அறிவுறுத்தி, மேலும் சிறப்பாக 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். ஆகையால் இந்த கல்வி மாற்றம் எவ்விதத்திலும் நிறுத்தப்படவில்லை” என அவர் கூறினார்.

கொலன்னாவ பகுதியில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here