நெதர்லாந்தில் இருந்து 26 மில்லியன் போதைப் பொருள் கடத்தல்

Date:

நெதர்லாந்தில் இருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை வந்தடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

படுக்கை விரிப்புக்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என தெரிவித்து அனுப்பப்பட்டுள்ள குறித்த பொதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விலாசமிடப்பட்டுள்ளது.

காட்போட் பெட்டியொன்றுக்குள் 01 கிலோ 600 கிராம் நிறையுடைய 4,000 போதை வில்லைகள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசுப்பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்துக்கு வருகை தந்திருந்த வௌ்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதை வில்லைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...