இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றதானது

Date:

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த பொதுமன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரதலக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி வாதாடி இருக்கின்றேன் .

இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம். வேறு சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி குறித்து நாமும் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை” என தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...