சனி மாற்றத்துடன் அமைச்சரவை மாற்றமும் வருகிறது

0
166

ஒத்திவைக்கப்பட்டிருந்த அமைச்சரவை பதவியேற்பு எதிர்வரும் 17ஆம் திகதி மாலை சனிப்பெயர்ச்சிக்குப் பின்னர் அடுத்த சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக ஜனாதிபதிக்கு கிடைத்த அறிக்கையில் பல அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, நெடுஞ்சாலை, சுற்றாடல், வனவிலங்கு, மின்சாரம், சுகாதாரம், துறைமுகம், வனவிலங்கு, கைத்தொழில், போக்குவரத்து போன்ற அமைச்சுக்கள் மாற்றப்படவுள்ளதோடு, தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரை நீக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையில் வினைத்திறனுடன் செயற்படும் அமைச்சுக்களில் பொலிஸ் அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன பெயரிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here