திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் ; உச்ச நீதிமன்றில் ஆணைக்குழு அறிவிப்பு!

0
194

வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி சட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்ற அறிவிப்பை திறைசேரி செயலாளர் குறிப்பிடவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் பிரிதிபத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை அறிவித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here