தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு!

0
237

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை (19) விவாதிப்பதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (18) தீர்மானித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என்ற சரத்து ஒன்றை உள்ளடக்குமாறு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த கோரிக்கைக்கு அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான ஒழுங்குமுறைகளை தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அப்போது தேர்தல் நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டமூலம் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட துருப்புச் சீட்டு என்றும், வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் அவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கிரியெல்ல தெரிவித்தார்.

தேர்தலை பிற்போடுவது நாட்டில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாம் என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பலர் இந்த சட்டமூலத்தை இந்த நேரத்தில் கொண்டுவருவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here