மனித உரிமை, சேதன பசளை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Date:

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியின் போது இலத்தரனிய வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாயம் என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த கொள்கையை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரில் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...