இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள பயிற்சி பட்டறையில் பங்கேற்க செல்லும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்கள் பயணம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் இந்தியா செல்வதற்கு முன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில், நடைபெறவுள்ள பயிற்சி பட்டறையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான அத்தியாவசிய வேலைத்திட்டங்களில் ஆராய வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

