இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று பிற்பகல் 4.15 முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் மின்சார சபையின் நிர்வாகம் இதுவரை முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சரித் ஜயலால் தெரிவித்தார்.