இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் நேற்று (22) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் வதிவிடத்தில் வைத்து ஆசீவாதம் பெற்றார்.