பெலியத்த படுகொலை : விசாரணை செய்ய 06 விசேட பொலிஸ் குழுக்கள்!

0
195

மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெலியத்த பிரதேசத்தில் நேற்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

நேற்று (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here