மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டை உடைத்து கொள்ளை!

Date:

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் இரண்டு மாடி வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை, விக்கிரமசிங்க பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் குறித்த வீட்டிற்கு வந்த போது வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், சில நபர்களால் வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டின் அலுமாரியில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம் ,தங்கத்தினால் செய்யப்பட்ட ஓட்டகம் சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...