நாடளாவிய ரீதியில் நாளை காலை முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது.
ஜனவரி மாத சம்பளத்துடன் வைத்தியர்களின் DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி வெளியிடப்பட்ட கடிதத்தை சுகாதார அமைச்சு இரத்துச் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், ஜனவரி மாதத்திற்கான உரிய கொடுப்பனவை சம்பளத்துடன் அன்றி விசேட வவுச்சர் மூலம் வழங்குமாறு நிறுவன தலைவருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.