ஆப்கானில் இழுத்து மூடப்பட்ட இலங்கை தூதரகம்
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு பொருத்தமான சூழல் இல்லை என வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கைத் தூதுவர் தனிப்பட்ட விடுமுறை பெற்று இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.