ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முடிவுறுத்தி 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் முடிவுறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
பெப்ரவரி 7, 2024 அன்று பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.