ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்கிறார். அங்கு டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கை வருகிறார்.
ஈரான் நாட்டிடம், கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெய்க்குரிய தொகையை சரி செய்யவும், இலங்கையிடமிருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.