திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (01) சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பு, ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரியவின் மகனின் திருமண விழாவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலியந்தலை பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஒரே மேசையில் அமர்த்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, ரணிலும் சஜித்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நெருங்கிய காலப்பகுதியில் நண்பரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மேசையில் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், வஜிர அபேவர்தன, லக்ஷ்மன் பொன்சேகா உள்ளிட்டோரும் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...