கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Date:

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனைத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையும், செரமிக் சந்தி தொடக்கம் காலிமுகத்திடல் வரையும் காலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரையும் மூடப்படும்.

அதேநேரம் குறித்த நாட்களில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் குறித்த வீதி மூடப்படவுள்ளது.

அத்துடன் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் சுதந்திர தினம் நிறைவடையும் வரையிலும் மேற்குறிப்பிட்ட வீதி மூடப்படும் என போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...