மீண்டும் கப்பல் சேவை

0
65

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டிணம் வரை இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவை 4 தசாப்தங்களாக தடைப்பட்டிருந்தது.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here