அம்பலாங்கொடை, சுனாமிவத்த பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றிருந்த விருந்தின் போது, அங்கு இருந்த ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கலபொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டின் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
