திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்த விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உட்பட 10 பேரை பெப்ரவரி 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
