இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரிக்குமாறு பஹ்ரைனில் உள்ள 39 நாடுகளின் கூட்டு கடற்படைக்கு கடற்படையிடம் கோரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 6 மீனவர்களுடனான இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது. அதற்மைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்த ‘லொரென்சோ புதா – 4’ என்ற பல நாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு 6 மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளது.