இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

0
48
FILE PHOTO: Former Pakistani Prime Minister Imran Khan pauses as he speaks with Reuters during an interview, in Lahore, Pakistan March 17, 2023. REUTERS/Akhtar Soomro/File Photo

அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here