அம்பாறை வெள்ள பாதிப்பு பகுதிகளை உடனே புனரமைப்பு செய்ய அரச அதிபருக்கு ஆளுநர் பணிப்பு

0
64

அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள தற்போதைய உட்கட்டமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை எனவும், உடனடியாக செயற்படுமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here