எல்.கே. ஜகத் பிரியங்கரவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றதுடன், விருப்புரிமைப் பட்டியலில் சனத் நிஷாந்த முதலிடம் பிடித்தார்.
ஏனைய நால்வராக பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் அக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு எல்.கே. ஜகத் பிரியங்கர விருப்பு வாக்குகளாக 40,527 பெற்று பட்டியலில் ஆறாவது இடத்தினை பெற்றிருந்தார்.
இதன்படி, சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு ஜகத் பிரியங்கரவுக்கு உரிமை உள்ளதுடன், அவர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.