பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகலவிடம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நூரா மல்டி டிரேடர்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக பேரீச்சம்பழம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வர்த்தகர்கள் இருவரும் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதன்படி, 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.