13வது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது ; பௌத்த மத உயர் பீடங்கள் அறிவிப்பு!

Date:

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர நிகாய, ராமாண்ய மகா நிகாயவின் மஹாநாகாய தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 02) ஜனதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் சுதந்திரம் தொடர்பான கடுமையான கவலைகளை உருவாக்கும் ஒரு பகுதியாக 13வது திருத்தம் இருப்பதாக மதத் தலைவர்கள் கருதுகின்றனர்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என குறிப்பிட்ட அவர்கள், அந்தத் திருத்தத்தை அமுல்படுத்தவே கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையின் விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.

இதன்படி, 13வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்படாவிட்டால், முழுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...