நேற்று (01) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்றும் (02) தொடரவுள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை அவர்களுக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.