இணையவழி பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், இந்த இரண்டு சட்டமூலங்களும் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால் இந்த சட்டமூலங்களை நிறைவேற்றியதில் சிக்கல் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.