இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

0
192

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) கைச்சாத்திடப்பட்டது.

தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இலங்கை – தாய்லாந்து விமான சேவைகளுக்கு இடையிலான தாராளமயப்படுத்தப்பட்ட புதிய இரு தரப்பு விமான சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here