அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்து, அமெரிக்க டொலர் 9 மில்லியன் அளவிலான மதிப்பில் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (04 அல்லது நாளை அந்த கொள்வனவு நடைபெறக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரலிய அரிசி வியாபாரம் உட்பட 25க்கும் மேற்பட்ட வணிகங்களின் உரிமையாளரான டட்லி சிறிசேன, சமீபத்தில் மிக ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ததன் காரணமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியிருந்தார்.
