சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த சில திருத்தங்கள் உள்வாங்கப்படாமல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், இதில் சபாநாயகரும் கையொப்பமிட்டு சான்றுரை படுத்தியுள்ளார்.
எனவே, அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.