அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்!

0
218

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும்.”

– இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒன்றிணைத்தும், கட்சிகளுடன் தனித்தனியாகவும் இரு வழிகளில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும் என்றே நான் நம்புகின்றேன்.

வடக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. கிழக்கிலும் பிரச்சினை நிலவுகின்றது. மலையகத்திலும் பிரச்சினை உள்ளது. தெற்கிலும் பிரச்சினை உண்டு. எனவே, தேசிய இனப்பிரச்சினை தொடர இடமளிக்கக்கூடாது. அந்தப் பிரச்சினை தொடர்ந்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது.

எனவேதான் விரைந்து தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன” – என்றார்.


N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here