ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா? அரசாங்க அமைச்சர்

0
80

ஞாயிறு தாக்குதலை தடுக்க செயற்படாதவர்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் தனது மனசாட்சியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கர்திகால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலுவான முதுகெலும்பு கொண்ட தலைவர் எனவும் முதலில் அவரது வார்த்தைகள் சிலருக்கு புண்படுத்துவது போல் இருந்தாலும் கோபப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாகவும் தனக்கும் இதில் ஒரு சந்தேகம் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் ஏதோ வகையில் பாதுகாக்கப்படுகிறார்களா என்பதை ஒரு கத்தோலிக்கராக மனசாட்சியுள்ள மனிதனாக தனது இதயம் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here