பதவி விளக்கினார் கெஹலிய ரம்புக்வெல்ல

Date:

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (6.2.2024) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரை தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் அவர் இன்று பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...